மணல் கடத்திய 5 பேர் கைது: மாட்டு வண்டி பறிமுதல்….

Author: Udhayakumar Raman
22 September 2021, 1:54 pm
Quick Share

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ளது கொடுங்கால் கிராமம். இந்த கிராமத்தில் அந்தோனியார் கெபி அருகே மணல் திருட்டு தனமாக அல்ல போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டு மெயின் ரோட்டுக்கு வந்த போது அவரை மடக்கிப் பிடித்த போலீசார் ஐந்து வண்டி மணல் கலையும் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட விக்னேஷ், ராஜசேகர், விஜயன், ஞானவேல், சிவ கண்டன் ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 117

0

0