லாரியை நெல் மூட்டைகளுடன் கடத்திச் சென்று விற்க முயன்ற 5 பேர் கைது

Author: kavin kumar
7 August 2021, 4:31 pm
Quick Share

சென்னை: கொடுங்கையூர் அருகே 25 டன் நெல் மூட்டைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை நெல் மூட்டைகளுடன் கடத்திச் சென்று விற்க முயன்ற 5 பேரை சிசிடிவி கேமிரா காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கோபால கிருஷ்ணன் கடந்த 3 ஆம் தேதி கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு குடோனில் இருந்து 25 டன் எடை கொண்ட 640 மூட்டைகளை தமிழ்நாடு வாணிபக் கழக நுகர் பொருள் பணிமனைக்கு கொண்டு செல்வதற்காக ஏற்றிச் சென்று எம்.கே.பி நகர் வடக்கு அவென்யூ பகுதியில் நிறுத்தி விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் 4 ஆம் தேதி காலை லாரியை எடுக்க வந்த கோபால கிருஷ்ணன் நெல் மூட்டைகளுடன் லாரி காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக கோபாலகிருஷ்ணன் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் லாரியானது மாதவரம் நோக்கிச் சென்றது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் சி.சி.டி.வி காட்சிகளைப் பின் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் , சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த ராஜா மற்றும் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி (23) ஆகிய இருவரும் தான் லாரியை ஓட்டிச் சென்றுள்ளனர் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜா, செல்வரசு ஆகிய இருவரே கடத்தி வரப்பட்ட அரிசி மூட்டைகளை விற்க முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவ்விருவரையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த பிரியா என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து லாரி மற்றும் அரிசி மூட்டைகளை மீட்டு பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அடைத்தனர்.

Views: - 199

0

0