ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது

By: Udayaraman
7 October 2020, 10:37 pm
Quick Share

காஞ்சிபுரம்: படப்பை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சதீஷ்குமார் என்பவரை இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரத்தூர் மேம்பாலம் பகுதியில் வெட்டி படுகொலை செய்து விட்டு மர்மகும்பல் தப்பிச் சென்றது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மணிமங்கலம் போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். ரியல் எஸ்டேட் தொழிலில் சதீஷ் , டேவிட் என்பவருடன் பார்ட்னர்ஷிப் வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

கொடுக்கல்-வாங்கல் பிரச்சனையில் டேவிட்டுக்கும் சதீஷ்க்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதேபோல் கார்த்திக் என்பவர் சதீஷிடம் வீட்டு மனை கேட்டு 70 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்திருந்தார். சதீஷ் வீட்டுமனை அளிக்காமல் பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரியவருகிறது. இந்த சூழ்நிலையில் டேவிட்டும் கார்த்திக்கும் ஒன்றாக சேர்ந்து பணம் மோசடி செய்த காரணத்துக்காக சதீஷ்ஷை கொல்ல திட்டமிட்டனர். இந்த திட்டத்தில் ஒரத்தூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ், காட்டாங்குளத்தூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் கூட்டாக சேர்த்துக்கொண்டு சதீஷ் பின் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

சம்பவம் நடைபெற்ற அன்று சதீஷ் காரில் வருவதை கண்ட கார்த்திக் தலைமையிலான கும்பல் ஒரத்தூர் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது ஓவர்டேக் செய்து சதீஷின் காரை நிறுத்தினர். பட்டாக்கத்தி மற்றும் கடப்பாறை போன்ற பயங்கர ஆயுதங்களால் சதீஷ்சை தாக்கும்போது சதீஷ்வுடன் வந்தவர்கள் தப்பி ஓடினர். பல இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்ட சதீஷ் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்த ஸ்ரீபெரும்பத்தூர் சரக காவல் உதவி கண்காணிப்பாளர் ஏஎஸ்பி கார்த்திகேயன் தீவிர விசாரணையை மேற்கொண்டார்.

இக்கொலை சம்பவம் தொடர்பாக சாலமங்கலம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், டேவிட் பில்லா, ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் மற்றும் ஆறுமுகம் ஆகிய 5 பேரை கைது செய்து மணிமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கில் வேறு யாராவதுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 87

0

0