புதுச்சேரியில் நிர்ணயித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 50 பேர் மீது வழக்கு

Author: kavin kumar
5 November 2021, 2:01 pm
Quick Share

புதுச்சேரி: உச்சநீதிமன்றம் நிர்ணயித்த நேரத்தை மீறி நேற்று தீபாவளி அன்று புதுச்சேரியில் பட்டாசு வெடித்ததாக 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காற்றுமாசு காரணமாக தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் காலை 6 மணி முதல் 7 மணி வரையில் ஒரு மணி நேரமும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் ஒரு மணி நேரமும் என 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க புதுச்சேரி அரசு அனுமதி வழங்கி இருந்தது. இந்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் விதிமுறையை மீறுபவர்களை கண்காணிப்பதற்கு நேற்று தீபாவளி அன்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர், புதுச்சேரி மாநிலத்தில் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 50 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரியில் 48 நகர்கள், ஏனாம் பிராந்தியத்தில் 2 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 219

0

0