வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோர் கைது

24 September 2020, 3:39 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் விவசாயிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட 50க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக விவசாயிகள் சங்கம், சமுக நீதி பேரவை, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு, மக்கள் அதிகாரம், மக்கள் உரிமை மீட்பு இயக்கம், தமிழ் தேசிய பேரியக்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் தமிழக விவசாய சங்க தலைவர் சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது. சமீபத்தில் மத்திய அரசு பராளுமன்றத்தில் விவசாயிகள் விளைபொருள் வணிகம், வர்த்தக சட்டம் விலை உறுதி அளிப்பு, பண்ணை ஒப்பந்தத்திற்கான சட்டம் மற்றும் ஆத்யாவசிய பொருட்கள் சட்டத்தை கொண்டு வந்தது.

இந்த சட்டத்தை கண்டித்து பல்வேறு கட்சியினர், விவசாய அமைப்பினர் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் பேராட்டம் வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாவை கண்டித்தும் விவசாய சங்கத்தினர் கோஷம் எழுப்பினர். அதை தொடர்ந்து சட்ட மசோதா நகல்களை தீயில் எரித்தனர். அப்போது போலீசார் தடுக்க முயன்ற போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Views: - 7

0

0