அரியலூர் மாவட்டத்தில் 5,30,025 வாக்காளர்கள்- இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

20 January 2021, 4:45 pm
Quick Share

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ரத்னா அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இதில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 12 வாக்காளர்கள் உள்ளதாகவும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 13 வாக்காளர்கள் உள்ளதாகவும் குறிப்பிடபட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 25 வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்து உள்ளார். இதில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அங்கீகரிக்கபட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Views: - 2

0

0