வேலூர் சரகத்தில் 55 காவல் ஆய்வாளர்கள் மாற்றம்: டிஐஜி அதிரடி உத்தரவு…!!

27 February 2021, 5:40 pm
inspector - updatenews360
Quick Share

வேலூர்: வேலூர் சரகத்தில் பணியாற்றி வந்த 55 இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. காமினி உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் சரகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 55 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த லதா திமிரிக்கும், வேலூர் தாலுகாவில் பணியாற்றி வந்த கருணாகரன் சத்துவாச்சாரிக்கும், சத்துவாச்சாரி புனிதா அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், வேப்பங்குப்பம் பாலசுப்பிரமணியன் தேசூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காட்பாடி நந்தகுமார் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவுக்கும், லத்தேரி கோவிந்தசாமி போளூருக்கும், குடியாத்தம் தாலுகா பார்த்தசாரதி திருவண்ணாமலை டவுனுக்கும், வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா உமராபாத்துக்கும், குடியாத்தம் அனைத்து மகளிர் சியாமளா கீழ்பென்னாத்தூருக்கும், வேலூர் பொருளாதார குற்றப்பிரிவில் நாகராஜன் திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் குற்ற ஆவண காப்பக சரஸ்வதி திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பகத்துக்கும், வேலூர் நக்சல் சிறப்பு பிரிவு ஜனார்த்தனன் கலசபாக்கத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட வேலூர் சரகத்துக்குட்பட்ட வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 55 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி.காமினி பிறப்பித்துள்ளார்.

Views: - 1

0

0