விமானநிலையத்தில் 59 லட்சம் கடத்தல் தங்க பறிமுதல்: 2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை

Author: kavin kumar
5 October 2021, 5:31 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் விமானநிலையத்தில் 59 லட்சம் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து 2 பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துபாயில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சந்தேகத்திற்கிடமாக நடந்துகொண்ட இருவரை அழைத்து அவரது உடமைகளை சோதனை செய்தபோது அவர்கள் உடைமைகள் மத்தியில் பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 59.33 லட்சம் மதிப்பிலான 1250 கிராம் கடத்தல் தங்கத்தை கண்டனர். அவற்றைப் பறிமுதல் செய்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் மற்றும் கண்ணன் என தெரிய வந்தது. தொடர்ந்து இவர்களிடம் தங்கத்தை கொடுத்து அனுப்பிய யார்? யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தனர் என அதிகாரிகள்தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 214

0

0