லாட்டரி விற்பனை செய்த 6 பேர் கைது: லாட்டரி சீட்டுக்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல்

Author: kavin kumar
14 August 2021, 3:31 pm
Quick Share

கிருஷ்ணகிரி: இராயக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்த 6 பேர் கைது செய்து, அவர்களிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுக்கள் மற்றும் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை நடைப்பெற்று வருவதாக வந்த இரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எ சாய்சரண் தேஜஸ்வி அவர்களின் உத்தரவின் பேரில், தேன்கனிக்கோட்டை காவல் துணைக்கண்காணிப்பாளர் டகிருத்திகா தலைமையில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் பாலக்கோடு, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளை சேர்ந்த 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் , 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுக்கள், 10 செல்போன்களையும் பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த விசாரணையின்போது தடைசெய்யப்படலாட்டரி விற்றபோது கைது செய்த 6 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 236

0

0