காரில் எடுத்து வரப்பட்ட 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பறிமுதல்
3 March 2021, 10:21 pmதஞ்சை: திருவையாறில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் காரில் எடுத்து வரப்பட்ட 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்துச் செல்பவர்கள் உரிய ஆவணத்துடன் எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நிலைக்குழு அலுவலர் கஜேந்திரன் வாகன சோதனையின்போது,
தில்லைஸ்தானம் சிவன் கோவில் அருகில் திருச்சியிலிருந்து திருவையாறு நோக்கி சென்று கொண்டிருந்த இண்டிகோ காரை சோதனை செய்தனர். அப்போது அதில் உடுமலைப்பேட்டை சேர்ந்த பாலன் என்பவரது மகன் சுதாகர் என்பவரிடம் இருந்து ரூ. 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. இந்தத் தொகை எதற்காக எடுத்துச் செல்லப்படுகிறது என்ற கேட்ட கேள்விக்கு உரிய பதில் அளிக்காத பட்சத்தில் பணத்தை பறிமுதல் செய்து திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
0
0