வாகன சோதனையில் சிக்கிய கண்டெய்னர் லாரியில் 640 குக்கர்: தேர்தல் அலுவலர்கள் விசாரணை

Author: Udhayakumar Raman
19 March 2021, 3:40 pm
Quick Share

தஞ்சை: தஞ்சையில் கண்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்ட 640 குக்கர்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.

சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஒரு கண்டெய்னர் லாரியில் 3 லட்சம் மதிப்புள்ள 640 குக்கர்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக அதை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர் தஞ்சாவூர் தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர்.

தேர்தல் அதிகாரிகள் பறக்கும் படையினர் தீவிர சோதனைக்கு பின்பு உண்மை நிலவரம் தெரியவரும் என தெரிவித்தனர். போதிய ஆவணங்கள் கையில் இருந்தாலும் தாலுக்கா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் என தெரிவித்தனர். வாகன சோதனையில் இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் 42 லட்சம் வரை உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதல்கட்ட விசாரணையில், இந்த குக்கர்கள் அனைத்தும் திருவையாறு பகுதிக்கு எடுத்துச் செல்வதாக தெரியவருகிறது.

Views: - 52

0

0