பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 65 வயது முதியவர் கைது

3 January 2021, 6:25 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி அருகே எட்டாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 65 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியை சேர்ந்த செல்வம் என்ற விவசாயியின் மகள் ரேவதி. ஒகேனக்கல்லில் உள்ள அரசுப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பாப்பரப்பட்டி பெரியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன்(65). இவர் ஒகேனக்கல் வனப்பகுதியில் மாடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி ரேவதியை ஜெய்கிருஷ்ணன் பாலியல் பலாத்காரம் செய்தாக கூறப்படுகிறது. இது குறித்து ரேவதியின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் ஜெய்கிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

Views: - 0

0

0