நடைபயிற்சிக்கு சென்ற ரேசன் கடை ஊழியர் மனைவியிடம் 7 பவுன் நகை பறிப்பு

4 February 2021, 1:21 pm
Quick Share

விருதுநகர்: சாத்தூர் அருகே நடைபயிற்சிக்கு சென்ற ரேசன் கடை ஊழியர் மனைவியிடம் 7 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். ரேஷன் கடை ஊழியர் இவரது மனைவி செண்பகவள்ளி (45 ). இவர் தினமும் தாயில்பட்டியில் இருந்து சிவாகாசி செல்லும் மெயின் ரோட்டில் அதிகாலை 5 மணி அளவில் ஐந்து பேருடன் நடைபயிற்சி சென்று வருவார். இந்த நிலையில் இன்றும் வழக்கம்போல் அதிகாலை 5 மணியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வழி மறித்து கழுத்தில் இருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடியது.

இது குறித்து வெம்பக்கோட்டை போலீசில் புகார் அளித்தார் செண்பகவள்ளி. புகாரின் பேரில் வெம்பக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாலாஜி மற்றும் சார்பு ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். பின்னர் வழிபறி சம்பவம் குறித்து வழக்கு செய்து வமிபறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Views: - 0

0

0