குமரியில் 70 சதவீத பேருந்துகள் இயங்கியது.! பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் மாற்றம் இல்லை

25 February 2021, 1:53 pm
Quick Share

கன்னியாகுமரி: தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் இன்று தொடங்குவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 டெப்போவில் 70 சதவீத பேருந்துகள் இயங்கியது.

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 பணிமனைகளில் தொமுச ,சிஐடியு, எச்.எம்.எஸ். ஏஐடியுசி போன்ற தொழிற் சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணா தொழிற்சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருவதால் குமரிமாவட்டத்தில் போக்குவரத்து பாதிப்பு என்பது ஏற்படவில்லை.70 சதவீத பேருந்துகள் இயங்கி வருகிறது.இதனால் இயல்பு நிலையில் மக்கள் பேருந்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0