பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது தாத்தா கைது

28 January 2021, 8:50 pm
Arrest_UpdateNews360
Quick Share

கோவை: கோவையில் பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோட்டைச் சேர்ந்தவர் காயத்ரி (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும், கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள மாமனார் வீட்டில் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் காயத்ரி வசித்து வருகிறார். இந்த நிலையில் காயத்ரியின் பத்து வயது மகளுக்கு அவரது தாத்தா சுப்பிரமணியன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த காயத்ரி அதிர்ச்சி அடைந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுப்பிரமணியனை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Views: - 0

0

0