பதுக்கி வைக்கப்பட்டிருந்த 74 பழமையான சிலைகள் மீட்பு

24 September 2020, 11:22 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 74 பழமையான சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி, ரோமன் ரொலான் வீதியில் உள்ள வீட்டில் பழமையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி சக்திவேல் தலைமையில் 20க்கும் போலீசார் மற்றும் இந்து அற நிலையத்துறை அதிகாரிகள் கும்பகோணம் நீதிமன்றமத்தில் சிறப்பு அனுமதி பெற்று ரோமன் ரோலண்ட் வீதியில் உள்ள வீட்டில் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் 60 ஐம்பொன் சிலைகளும், 14 கற் சிலைகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 74 சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் ஜூன் பால் ராஜரத்தினம் என்பதும், இவர் கடந்த 2016ஆம் ஆண்டு புதுச்சேரியில் பழமையான சிலைகள் பதுக்கிய வழக்கில் தொடர்புடை பெண்ணின் சகோதரர் என்பதும் தெரியவந்துள்ளது. இதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளுக்கு தொல்லியல் துறை சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதாக என்பதை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தமிழக சிலை கடத்தல் பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Views: - 12

0

0