8.64 லட்சம் மதிப்புள்ள தங்கம் நூதன் முறையில் கடத்தல்

8 May 2021, 7:33 pm
Quick Share

திருச்சி: ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமான நிலையத்தில் 8.64 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த நபரை மத்திய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

ஷார்ஜாவில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளை மத்திய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். ஒரு பயணியின் நடவடிக்கை சந்தேகம் ஏற்படவே சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் கட்டிங் பிளேயரில் தங்கத்தை உருளை வடிவில் இரண்டு தங்க குச்சிகளாக மறைத்து எடுத்து வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை செயதனர். அப்போது அவர் பெரம்பலூரை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்நாதன் என்பது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 178 கிராம் எனவும் இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 8.64 லட்சம் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 105

0

0