தன்பாலின உறவுக்கு இணங்கமறுத்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்: பெற்றோர் சாலை மறியல்

Author: Udhayakumar Raman
23 September 2021, 3:31 pm
Quick Share

சென்னை: மதுரவாயலில் தன்பாலின உறவுக்கு இணங்க மறுத்த சிறுவனை தாக்கிய விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளை பிடிக்கக்கோரி பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவனைக் காணவில்லை என்று அவரது பெற்றோர் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் மதுரவாயல் மேம்பாலத்தின்கீழ் தலையில் பலத்தக் காயங்களுடன் சிறுவன் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டான். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தன்னிடம் தன்பாலின உறவுக்கு இணங்க மறுத்ததால் 9 வயது சிறுவனை தலையில் கல்லால் தாக்கிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், அவர்களை போலீசார் பிடிக்க மறுத்து வருவதாகவும் கூறி பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் இன்று மதுரவாயல் போலீஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 86

0

0