சென்னை: வியாசர்பாடியில் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் போது சாலை விபத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.
சென்னை வியாசர்பாடி தாஸ் நகர் மூன்றாவது தெரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுடர்விழி வயது 13 என்ற மகள் உள்ளார். இவர் கொளத்தூர் எவர்வின் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி சுரேஷின் நண்பர் ஜெகநாதன் என்பவர் உடன் இருசக்கர வாகனத்தில் கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளிக்கு சுடர்விழி சென்று கொண்டிருந்தார்.
அப்போது கொளத்தூர் ரெட்டில்ஸ் ரோடு வழியாக சென்று கொண்டிருந்த போது அவர் சென்று கொண்டு இருந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது. அப்போது ஜெகநாதன் இடது புறமாகவும் சுடர்விழி வலது புறமாகவும் விழுந்தார். அப்போது எதிரே வந்த சென்னை மாநகராட்சி குப்பை லாரி சுடர்விழி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சுடர்விழியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரியார் நகர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் கொளத்தூர் போலீசார் மற்றும் ராஜமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர். சாலை விபத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0
0