9ஆம் வகுப்பு மாணவி 8 மாதம் கர்ப்பம் : பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது

26 February 2021, 4:28 pm
Quick Share

திருவண்ணாமலை: ஆரணி அருகே பெற்ற மகளையே தந்தை கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குன்னத்தூர் மதுரா அகஸ்தியம்பட்டு கிராமத்தில் கன்னியப்பன்(47) ராஜேஸ்வரி(35) தம்பதியினர் ஒரு மகன் ஒரு மகளுடன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறனர். கன்னியப்பன் குன்னத்தூர் பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். கன்னியப்பனின் மகள் குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு கன்னியப்பன் அவருடைய மகளை கற்பழித்து தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் அந்தப் பெண் கர்ப்பமாகியுள்ளார்.

நேற்று முன்தினம் அந்த 9ம் வகுப்பு மாணவி கர்ப்பமாக இருப்பது பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் மற்றும் குன்னத்தூர் கிராம பொதுமக்கள் காமக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்தப் பெண்ணை பரிசோதனை செய்ததில் அந்தப் பெண் 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மேலும் இது சம்பந்தமாக திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விசாரணை செய்ததில் அந்தப் பெண் அவரது தந்தை கன்னியப்பன் மூலமாக கர்ப்பமானார் என்பது விசாரித்ததில் தெரியவந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட 9ம் வகுப்பு மாணவியின் பாட்டி லட்சுமி(65) ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கன்னியப்பன் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை செய்த மகளிர் காவல் நிலைய போலீசார் கன்னியப்பனை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஆரணி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மகாலட்சுமி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஆரணி அருகே பெற்ற மகளையே தந்தை கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 11

0

0