வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்… வீடுகளில் தனிமைபடுத்தி கொண்ட பொதுமக்கள்…

16 August 2020, 3:15 pm
Quick Share

நீலகிரி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உதகையில், ஏழாவது வாரமான இன்று தமிழக அரசின் ஞாயிற்று கிழமைகளில் தொடரும் முழு ஊரடங்கிற்கும் ஆதரவு அளித்து தங்களை வீடுகளில் தனிமை படுத்தி கொண்டுள்ளதால் உதகை மற்றும் சுற்று வட்டார பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அதனை தடுக்கும் நடவடிக்கையாக கடந்த மாதத்தை போன்று இம்மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இந்த மாதத்திற்கான மூன்றாவது ஞாயிற்று கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.

அதே போல் வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால், பாதுகாப்பு பணி மற்றும் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மாவட்டத்திலுள்ள 14 சோதனைச் சாவடிகள் மட்டுமின்றி, உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, குந்தா மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் 10 தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகன போக்குவரத்தை கட்டுபடுத்துவதுடன், கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கிராமப்புற பகுதிகளிலும் பொது மக்கள் தங்களை வீடுகளில் தனிமைபடுத்தி கொண்டுள்ளதால், உதகை மற்றும் சுற்று வட்டார பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

Views: - 28

0

0