இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்!
17 November 2020, 6:37 pmQuick Share
மயிலாடுதுறை: சீர்காழி அருகே பழையாரில் 4 டன் எடையள்ள திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையார் மீனவர் கிராமத்தில் 8000 மீனவர்கள் வசித்து வருகின்றனர். தொடர் மழை மற்றும் கடல் சீற்றத்தால் கடந்த சில நாட்களாக மீனவர் கடலுக்கு செல்லாத நிலையில் இன்று துறைமுக முகத்துவாரம் அருகே கரையோர பகுதியில் 4 டன் எடை மற்றும் 12 அடி நீளமுள்ள திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கியது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த சீர்காழி வனத்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் கடற்கரை பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.