ஸ்ரீவில்லிபுத்தூரில் தீப்பெட்டி குடோனில் தீ விபத்து…. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

Author: kavin kumar
4 August 2021, 1:27 pm
Quick Share

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தீப்பெட்டித் குடோன் முழுவதும் எரிந்து பல லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீப்பெட்டி செய்யும் தொழிற்சாலை பல இயங்கி வருகிறது. இதிலிருந்து தீப்பெட்டிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம் கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டித் குடோனில் வைத்துள்ளார்.

இந்த குடோனுக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான குப்பை கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் இந்த குப்பை கிடங்கில் சேகரிக்கப்படும் குப்பைகள் தீவைத்து எரிக்கப்படும். அதன் அடிப்படையில் இன்றும் குப்பை கிடங்கில் தீ வைத்து எரிக்கப்பட்ட போது அருகிலிருந்த தீப்பெட்டி குடோன் மீது தீ பரவியதால் தீப்பெட்டி குடோன் தீ பிடித்து எரிந்தது.

தொடர்ந்து தீ வேகமாக பரவியதால் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து வருகின்றனர். இருந்தபோதிலும் தீ கட்டுக்கடங்காமல் பரவியதால் தீப்பெட்டித் குடோன் மற்றும் அதில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாயின.தீ விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த வன்னியம்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 192

0

0