கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது: 5 கிலோ கஞ்சா பறிமுதல்

20 September 2020, 7:17 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், பெரியபாளையம், வெங்கல், திருப்பாச்சூர், காக்களூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் இன்று தீவிர சோதனை மேற்கொண்டதில், பெரியபாளையம் பகுதியில் ஒரு கிலோ கஞ்சாவும், சோழவரத்தில் 2 கிலோவும், வெங்கல் திருவள்ளூர் கடம்பத்தூர் உள்ளிட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 2 கிலோ கஞ்சாவும் மொத்தமாக 5 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் கஞ்சாவை பாக்கெட்டுகளில் வைத்து விற்பனையில் ஈடுபட்ட ஐயப்பன், முருகன், ராகுல் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில், போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

Views: - 10

0

0