நூல்கண்டு பாரம் ஏற்றி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி விபத்து…

26 August 2020, 2:37 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு அருகே நூல்கண்டு பாரம் ஏற்றி வந்த லாரி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதிய விபத்தில் யாருக்கும் சிறிய காயம் இல்லாமல் உயிர் தப்பித்தனர் .

மதுரை மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் சுரேஷ் என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நூல்கண்டு பாரம் ஏற்றி ஈரோடு மாவட்டம் பவானி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் நாடார் மேடு அருகே சென்றுகொண்டிருந்தபோது லாரி வருவதை அறியாமல் சாலையை கடக்க பெண் முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோதாமல் இருக்க சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி அருகே இருந்த மிக்ஸி கிரைண்டர் கடையில் மோதி நின்றது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் சிறிய காயம் இல்லாமல் உயிர் தப்பித்தனர் . சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஓட்டுனரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் விபத்து நடந்த பகுதி மிகவும் சிறிய சாலை என்பதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Views: - 23

0

0