வெங்காயம் லோடு ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

Author: kavin kumar
13 October 2021, 4:31 pm
Quick Share

தருமபுரி:அரூர் அருகே வெங்காயம் லோடு ஏற்றி வந்த லாரி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் லாரி ஓட்டுநருக்கு பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களுருலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்க்கு ஈச்சர் லாரியில் வெங்காயலோடு ஏற்றிக்கொண்டு தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த அழகிரி நகர் வழியாக கள்ளக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி; பாலத்தின் மேல் இருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் இருக்கும் வாழத் தோட்டத்தில் தலைகுப்புற விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒட்டு மொத்த வெங்காய மூட்டைகள் அனைத்தும் வாழைத்தோட்டத்தில் கொட்டிக் கிடக்கிறது. லாரியை ஓட்டி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் சுரேஷ் என்பவரின் கால் முறிவு ஏற்பட்டு படுகாயத்தோடு அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தப் பாலத்தின் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுவதால் பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 224

0

0