கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை அடித்து கொலை செய்த மனைவி

6 August 2020, 10:31 pm
Quick Share

வேலூர்: பேர்ணாம்பட்டு அருகே கள்ளக்காதல் காரணமாக மனைவி கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை அடித்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பன்னீர்குட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (38) இவர் மனைவி காமாட்சி இவர்களுக்கு திருமணமாகி தனுஷ்,திவாகர்,குணா என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.இந்த நிலையில் சரவணுக்கும் காமாட்சிக்கும் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர். ஒன்றரை ஆண்டுகளாக சரவணன் அதே பகுதியில் உள்ள தனது அக்கா ரோஜா ரமணி வீட்டில் 3 குழந்தைகளுடன் தங்கியுள்ளார். மனைவி காமாட்சி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதால் பிரிந்து வந்ததாக மகன்களிடமும், உறவினர்களிடமும் அடிக்கடி கூறி சரவணன் மன வருத்தமடைந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று சரவணன் தனது மனைவி பார்க்க சென்ற போது பன்னீர் குட்டை காலனி பகுதியை சேர்ந்த மதன் குமார் என்பவருடன் மனைவி காமாட்சி தகாதமுறையில் இருந்துள்ளதை கண்டு சரவணன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சரவணன் மனைவி காமாட்சி மற்றும் கள்ளக்காதலன் மதன் குமார் ஆகியோர் பன்னீர் குட்டை சாலையோரம் சரவணனை சரமாரியாக தாக்கிவிட்டு சாலையோரம் வீசிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் மனைவியை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முதல் சரவணை காணாததால் உறவினர் இன்று தேடிய நிலையில் அவர் பலத்த காயங்களுடன் சாலையோரம் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்தில் குடியாத்தம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் மோப்ப நாயை சம்பாவை வர வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இது குறித்து பேர்ணாம்பட்டு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சரவணின் உடலை பிரேதபரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதலால் மனைவி கள்ளக்காதலனுடன் இணைந்து கணவரை கொலை செய்ததால் மூன்று பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது.அவர்கள் அனாதையாக தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Views: - 0 View

0

0