சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

Author: Udayaraman
29 July 2021, 7:51 pm
Quick Share

மதுரை: மதுரை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் அடுத்த எல்.கே.பி நகர் பகுதியில் கடந்த 2018 -ம் ஆண்டு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரை சிறுமியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிலைமான் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கின் மீதான விசாரணை மதுரை மாவட்ட சிறார் வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆனந்தகுமாருக்கு எதிராக அனைத்து சாட்சிகளும் நிரூபிக்கபட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சிறார் வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்ற நீதிபதி ராதிகா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஆனந்தகுமார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 147

0

0