சிலிண்டர்களின் விலை உயர்வினை கண்டித்து ஒருநாள் அடையாள வேலை வேலை நிறுத்தம்

Author: kavin kumar
9 August 2021, 1:54 pm
Quick Share

கிருஷ்ணகிரி: மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வினைக் கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்டோ நலவாரிய சங்கத்தின் சார்பில் ஒருநாள் அடையாள வேலை வேலை நிறுத்தத்துடன் கண்ட ஆர்ப்பாடத்தில் ஈடுப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்டோ நலவாரிய சங்கத்தின் சார்பில் மத்திய அரசு தொடர்ந்து ஆட்டோ தொழிலாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பட்ட மக்களும் பாதிக்கும் வகையில் பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசினைக்கண்டித்து மாவட்டம் ழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராடத்தில் ஈடுப்பட்டு உள்ளனர். இதனைத்தொடர்ந்து மத்திய அரசு உடனடியாக உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல், மற்றம் சமையல் எரிவாயு விலை உயர்வு ஆகியவற்றின் விலை உயர்வால் வாழ்வாதாரம் இழந்து உள்ளதால் மத்திய அரசு இதனை திருப்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மாவட்டத் தலைவர் சிவகுமார் தலமையில் நடைப்பெற்ற இந்தக் கண்டன ஆர்பாட்டத்தின்போது ஆட்டோ தொழிலாளிகள் பாதிக்கும் வகையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மட்டுமின்றி இன்சுரன்ஸ் பிரிமியம் உயர்வினை உயர்த்தி வருவதை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள். உடனடியாக அனைத்து தரப்பட்ட மக்களும் பாதிக்கப்படுள்ளனர். இந்த பொட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையில் மீண்டும் மிகப்பெரிய அளவில் பேராட்டதில் ஈடுப்படபோவதாக தெரிவித்தனர். மத்திய அரசினை கண்டித்து நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்பாட்டத்தின்போது மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 500-க்கு மேற்பட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினார்கள்,

Views: - 189

0

0