குடிபோதையில் நீலகிரித் தைலம் குடித்தவர் சிகிச்சை பலனின்றி பலி!!!
Author: kavin kumar2 November 2021, 3:33 pm
சென்னை: வியாசர்பாடியில் குடிபோதையில் நீலகிரித் தைலம் குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை வியாசர்பாடி மேல்பட்டி பொன்னப்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவரது பேரன் மித்திரன் என்பவருடன் ராஜசேகர் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தொண்டை கரகரப்பாக உள்ளது என்று கூறி குழந்தையின் இரும்பல் மருந்து என்று நினைத்து அங்கு இருந்த நீலகிரி தைலத்தை தவறுதலாக குடித்து விட்டார். உடனடியாக இது குறித்து அங்கிருந்த உறவினர் ராமநாதன் என்பவரிடம் கூறியுள்ளார். உடனடியாக அவரை ராமநாதன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். மேலும் இறந்து போன ராஜசேகர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
0
0