பாலியல் குற்றங்களுக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும்: ஜான்பாண்டியன் வலியுறுத்தல்

5 October 2020, 8:22 pm
Quick Share

ஈரோடு: பாலியல் குற்றங்களுக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று ஜான்பாண்டியன் வலியுறுத்தினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஈரோடு வந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனுக்கு கருங்கல்பாளையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜான் பாண்டியன், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வரவேற்கிறது என்றார். மேலும் உத்ரபிரதேச சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாகவும் இதுபோன்ற குற்றங்களுக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றார்.இதேபோல் அ.தி.மு.க உட்கட்சி் பிரச்சனையில் கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.

Views: - 30

0

0