அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம்

23 February 2021, 12:26 pm
Quick Share

ஈரோடு: அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்

ஈரோடு மாவட்டம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் , ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராகி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு 10 லட்சமும், உதவியாளர்களுக்கு 5 லட்சமும் வழங்க வேண்டும், பணியிட மாறுதல் மற்றும் மூன்று வருடங்கள் பணி முடித்த ஊழியர்களே பதவி உயர்வு வழங்க வேண்டும்,

பத்து வருடங்கள் பணி முடித்த உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தில் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து இரண்டாவது நாளாக இன்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இப்போராட்டத்தில் தங்களின் கோரிக்கைகள் குறித்து 500 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Views: - 8

0

0