14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ஸோவில் கைது!

19 August 2020, 9:17 pm
Quick Share

கோவை: காரமடை அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் காரமடை பெள்ளத்தி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவலிங்கம் (26). இவர் அதே பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ சோதனை மேற்கொண்ட போது சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சிவலிங்கத்துடன் சிறுமிக்கு வரும் 21ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

இதையறிந்த சைல்ட் லைன் அமைப்பின் நிர்வாகிகள் சிறுமியை மீட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிவலிங்கத்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 42

0

0