தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த மூன்று வயது குழந்தை

Author: Udhayakumar Raman
17 March 2021, 9:12 pm
Quick Share

காஞ்சிபுரம்: மூன்று வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெருநகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை சேர்ந்த வரதராஜன் நித்யா தம்பதியினரின் தங்களுடைய இரண்டு வயது மகள் கிருத்திகாஸ்ரீ மற்றும் ஏழு மாத குழந்தையை அழைத்துக்கொண்டு பெருநகர் அருகே உள்ள காரணை கிராமத்துக்கு தங்களுடைய உறவினரின் ஈம காரியம் நிகழ்ச்சிக்கு வந்தனர். ஈமகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்போது மூன்று வயது கிருத்திகா ஸ்ரீ யை கண்காணிக்காமல் விட்டுவிட்டனர். பின்னர் உணவு பரிமாற்றம் நிகழ்ச்சி முடிந்த பின்னர் தான் குழந்தையை காணவில்லை என அலறி அடித்து கொண்டு தேடி பார்த்தனர். அப்பகுதி முழுவதும் தேடியும் கிருத்திகாஸ்ரீ கிடைக்கவில்லை.

உறவினர்கள் கை கால்கள் கழுவ தண்ணீர் தேவை என்பதால் பூமியில் புதைக்கப்பட்டுள்ள சம்ப் எனப்படும் தண்ணீர் தொட்டியை எட்டி பார்த்தனர். தண்ணீர் தொட்டியில் கிருத்திகாஸ்ரீ சடலமாக கிடப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியுற்றனர். உடனே சிறுமியை மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கிருத்திகாஸ்ரீ ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பெருநகர் போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 62

0

0