ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்:கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம்
17 September 2020, 11:07 pmதிருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் மெதூர் ஊராட்சிக்குட்பட்ட விடதண்டலம் கிராமத்தில் நியாயவிலைக் கடையில் ரேசன் அரிசியை வாங்கி செல்லும் பொதுமக்களிடம் பணம் கொடுத்து வாங்கி வாகனம் மூலம் ஆந்திராவிற்கு கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதன்பேரில் பொன்னேரி வருவாய்த்துறையினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டு போது, அரிசிகடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். மேலும் ஒரு டன் அளவிற்கு சிறு சிறு மூட்டைகளாக ரேஷன் அரிசி இருந்ததை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளை அரசு நுகர் பொருள் வாணிப கழக குடோனிற்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த சில மாதங்களாக ரேசன் அரிசி மூட்டைகள் குறைந்த விலைக்கு வாங்கி கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, மீஞ்சூர், சோழவரம், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு அரிசி கடத்தலை தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.