காதுகுத்து விழாவிற்கு வந்த வாலிபர் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழப்பு

Author: Udayaraman
26 July 2021, 7:56 pm
Quick Share

விருதுநகர்: சாத்தூர் அருகே உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்த வாலிபர் குளிக்கச் சென்ற போது கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரது மகன் செல்வகுமார். இவர் தனது உறவினர் வீட்டு காதுகுத்து விழாவிற்காக வெம்பக்கோட்டை அருகில் உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் விழாவிற்கு வந்த செல்வக்குமார் அருகில் உள்ள கல்குவாரிக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்து பலன் அளிக்காமல் வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கல்குவாரி குட்டையில் மூழ்கிய செல்வகுமாரி தேடினர். 2 மணிநேர தேடுதலுக்கு பின்னர் நீரில் மூழ்கிய செல்வகுமார் சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை போலீசார் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் வாலிபர் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Views: - 127

0

0