கல்வி அமைச்சரிடம் மனு அளிக்க 4 ஆயிரம் கி மீ நடை பயணம் மேற்கொள்ளும் இளைஞர்

23 November 2020, 9:16 pm
Quick Share

விருதுநகர்: இந்திய முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மனநல பாடத்திட்டத்தை கட்டாயமாக இணைக்க வேண்டும் எனக் கூறி மத்திய கல்வி அமைச்சரிடம் மனு அளிக்க 4000 ஆயிரம் கீமீ நடை பயணம் மேற்க்கொள்ளும் ராஞ்சியை சேர்ந்த இளைஞர்.

இந்தியாவில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்க்கும் மன அழுத்தம் மற்றும் மனச் சேர்வு காரணமாக 13 முதல் 15 வயதுக்கு உட்ட பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளுவதாக கூறியும், இதனால் இந்திய முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மனநல பாடத்திட்டத்தை கட்டாயமாக இணைக்க வேண்டும் எனக்கூறி ரோனித் ரஞ்சன் (23) என்பவர் கன்னியாகுமரி முதல் டெல்லி வரை 4000 கிலோ மீட்டர் நடை பயணமாக சென்று மத்திய கல்வி அமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி கன்னியாகுமரியில் நடைபயனத்தை தொடங்கிய இவர் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்து தனது மனுவில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கையெழுத்தை பெற்று தனது பயணத்தை தொடர்ச்சியாக தொடங்கினார். இவர் 2021 ஏப்ரல் மாதம் டெல்லி சென்றடைய இருப்பதாகவும் தெரிவித்தார் அங்கு சென்று மத்திய கல்வி அமைச்சரிடம் அளிக்க உள்ளார்.

Views: - 0

0

0