நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் 4 பேர் பணி நீக்கம்

21 October 2020, 3:48 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் தொடர்பான புகாரில் கொள்முதல் நிலைய ஊழியர்கள் 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் கண்ணாரப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்16.10.20 அன்று லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு துறையினர் ஆய்வின்போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் தொடர்பாக கொள்முதல் நிலைய எழுத்தர் மற்றும் காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல குடவாசல் வட்டம் கூந்தலூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் தொடர்பாக விவசாயிகளிடமிருந்து வரப்பெற்ற புகார் மனுவின் அடிப்படையில் கொள்முதல் நிலைய எழுத்தர் மற்றும் உதவியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களிலும் எவ்வித போகும் இடம் என்றே கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Views: - 14

0

0