போலி சான்றிதழ்கள் வழங்கி பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை:இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி…

Author: kavin kumar
21 October 2021, 7:29 pm
Quick Share

மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் போலி சான்றிதழ்கள் வழங்கி பணியில் சேர்ந்தவர்கள் மீது அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தெரிவித்தார்.

உலக பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமையில் கோவில் நகைகளை உருக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து தமிழக அரசு கோவில் நகைகளை உருக்குவதை கண்டித்து அம்மன் சன்னதி முன்பாக கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் இந்து முன்னணி கட்சியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;- கோவில் நகைகளை உருக்குவது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்பை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் 6வது நாளாக இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழக அரசு நகை உருக்குவது சட்டவிரோதமானது மட்டுமின்றி உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும். கடந்த 60 ஆண்டுகளாக கோவிலின் வரவு செலவுகளை வழங்கவில்லை என 2015ல் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது, தற்போது வரையில் அரசு தரப்பில் எந்தவித கணக்குகளும் சமர்ப்பிக்கவில்லை. 1977 நகைகள் உருக்கப்பட்டது என்றும், வங்கியில் இருப்பு செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளனர், அவ்வாறு என்றால் டெபாசிட் செய்யப்பட்ட வங்கியில் எவ்வளவு தங்கம் உள்ளது என்பது குறித்தும், அதற்கான வரவு செலவு கணக்குகளை அரசு தெரிவிக்க வேண்டும். ஊழல் செய்யவே தங்கத்தை உருக்கும் அறிவிப்பு உள்ளது. இதனை இந்து முன்னணி தடுத்து நிறுத்தும்.

கோவில் தங்கத்தை உருகுவதற்கு வேகம் காட்டும் அரசு, கோவில் நிலங்களை கண்டுபிடித்து மீட்க தீவிரம் காட்ட வேண்டும்.கோவில் வருமானத்தை கோவில் பணியாளர்களுக்கும், கோவில் பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது, அதனை அரசாங்கம் அவமதித்து வருகிறது, இதனையும் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் இந்து முன்னணி சார்பில் அக்டோபர் 26 ஆம் தேதி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.திமுக அரசு இந்துக்களுக்கு மட்டும் எதிராக செயல்படுகிறது, மீலாதுநபிக்கு வாழ்த்துக்கள் சொல்லும் முதல்வர், தீபாவளிக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டும்.

இன்றைக்கு சிறுபான்மையினர் அவர்களுக்கான ஆட்சி நடைபெறுவது போன்று தேவாலயங்கள், மசூதிகளை துவங்கி கொண்டு நடத்தில் வருகிறது.இந்து மக்கள் மற்றும் பக்தர்களை திரட்டி 26-ல் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளோம் போராட்டத்தில் பங்கேற்க அரசியல் கட்சிகள் இந்து விரோத கட்சிகள் தான். குறிப்பாக திமுக கூட்டணியில் நக்சலைட்டு சிந்தனைகள் மற்றும் கடவுள் மறுப்பாளர்கள்தான் திமுக கூட்டணியில் உள்ளனர்.மேலும் மீனாட்சி அம்மன் கோவிலில் போலி சான்றிதழ்கள் வழங்கி பணியில் உள்ளவர்கள் மீது அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டுக் கொண்டார்.

Views: - 178

0

0