உரங்களை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை தேவை : விவசாயிகள் வலியுறுத்தல்!!

10 September 2020, 5:36 pm
Farmers Demand - updatenews360
Quick Share

தூத்துக்குடி : உரங்களை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டியில் விவசாயிகள் வலியுறத்தியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உரங்கள், விதைகள் ஆகியவற்றை பதுக்கி வைத்து அதிகவிலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் அதன் தலைவர் ஓ.ஏ.நாரயணசாமி தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுவினையும் கோட்டாட்சியர் விஜயாவிடம் வழங்கினர்.

Views: - 7

0

0