கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது: ஒரு கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்…
4 September 2020, 11:03 pmநாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கீழையூர் உப்ப நகர் மாரியம்மன் கோவில் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது அதில், ரூபாய் 60 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார்,
இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்தி வந்த மயிலாடுதுறை கிட்டப்பா பாலம் அருகே உள்ள ஹாஜியார் நகரை சேர்ந்த காமராஜர், தீப்பாய்ந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்நாதன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் கஞ்சா, இருசக்கர வாகனம் மற்றும் அதனை கடத்தி வந்த இருவரையும் தனிப்படை போலீசார் செம்பனார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதனையடுத்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை கடத்தி வந்து இருவரையும் கைது செய்தனர்.
0
0