பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை: மலிவு விலை வீடுகள் மற்றும் ரியல் எஸ்டேட் சங்கத்தினர் கோரிக்கை

29 November 2020, 3:39 pm
Quick Share

திருச்சி: தமிழக அரசு பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலிவு விலை வீடுகள் மற்றும் ரியல் எஸ்டேட் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலிவு விலை வீடுகள் மற்றும் ரியல் எஸ்டேட் சங்கத்தின் மாநில அளவிலான அலுவலக திறப்பு விழா திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் புகழேந்தி, துணைத்தலைவர் சீதாராமன், இணைச்செயலாளர் முத்துவிஜயன், பொருளாளர் ராஜபூபதி, துணைச் செயலாளர் ரவீந்திரன் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சங்கத்தின் உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன் பேசுகையில், “ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மலிவு விலை வீடுகளுக்கள் பத்திரப்பதிவு கட்டணம் ஆனது 3சதவீதம் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழகத்தில் பத்திர பதிவு கட்டணம் அதிகம் அளவில் உள்ளது எனவே தமிழக அரசு பத்திர பதிவு கட்டணத்தை குறைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டுமான தொடர்பான விதிகளுக்கான தளர்வு வழங்க வேண்டும், மேலும் கட்டிட வல்லுனர்களுக்கான வருமானவரி குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

Views: - 0

0

0