அட நாய் சேகர் படத்தின் கதை இதுதான்-ஆ !! அப்போ படத்துல காமெடிக்கு பஞ்சமே இருக்காது !!!

Author: kavin kumar
15 October 2021, 5:21 pm
Vadivelu_naaisekar
Quick Share

நடிகர் வடிவேலு நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் லைக்கா புரொடக்சன் தயாரிப்பில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவர உள்ள படம் ” நாய் சேகர் Returns ” இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது . சமீபத்தில் இப்படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. சமீபத்தில் காமெடி நடிகர் சதிஷ் நடித்து வெளிவர உள்ள படமும் “நாய் சேகர்” என்ற தலைப்பில் தான் உள்ளது .

இந்த நிலையில் படத்தின் டைட்டில் ஒன்றாக இருப்பதால் யாருக்கு யார் விட்டுக்கொடுப்பது என்று தெரியாமல் இரு தரப்பினருமே இந்த தலைப்பு தான் வேண்டும் என்று அடம்பிடிக்கின்றனர். வடிவேலுவின் ரசிகர்கள் நாய் சேகர் என்ற தலைப்பு வடிவேலுக்கு தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறிவருகின்றனர். சினிமா துறையில் சிலர் நடிகர் சதிஷிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் . இந்த குழப்பம் ஒருபக்கம் இருக்க நடிகர் வடிவேலு நடிக்கும் “நாய் சேகர் returns” படத்தின் கதை பற்றி தகவல் ஒன்று கசிந்துள்ளது .

நாய் சேகர் Returns படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் பணக்காரர்கள் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை திருடி அவற்றை பேரம் பேசி அவர்களிடமே விற்பவர் போன்ற கதாபாத்திரம் அதனால் தான் பஸ்ட்லுக் போஸ்டரில் கூட வடிவேலு மூன்று நாய்களை கையில் வைத்திருப்பதுபோல் இருக்குகிறது என்று ஒரு செய்தியும் கசிந்துள்ளது. இந்த படம் எப்பொழுது வெளியாகும் என்று தெரியவில்லை பல பிரச்சனைகளுக்கு பிறகு நடிகர் வடிவேலு நடிக்கும் படம் ( நாய் சேகர் Returns) இது என்பது குறிப்பிடத்தக்கது .

Views: - 710

3

1