சுற்றுலா பயணிகளுக்கு குட்நியூஸ்: கோவை குற்றாலத்திற்கு இன்று முதல் மீண்டும் அனுமதி..!!

Author: Aarthi Sivakumar
9 October 2021, 9:09 am
Quick Share

கோவை: நீர் வரத்து குறைந்ததையடுத்து கோவை குற்றாலத்திற்கு மீண்டும் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் சாடிவயல் பகுதியில் கோவை குற்றாலம் எனும் சுற்றுலா மையம் உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகமாக உள்ளதால், கடந்த 5 ம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத் துறை அறிவித்தது.

கோவையின் முக்கிய சுற்றுலாத்தலமான சாடிவயல் பகுதியின் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கோவை குற்றாலம் கொரோனா காரணமாக தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா குறைந்ததையடுத்து சமூக இடைவெளியுடன், அரசு விதித்த பாதுகாப்பு விதிமுறைகளை கையாண்டு ஒரு மணி நேரத்திற்கு 40 பேர் என்கின்ற விதத்தில் அனுமதிக்கப்பட்டது.

அதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து குழந்தைகளுடன் கூட்டம் கூட்டமாக வர தொடங்கினர். ஆனால், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோவை குற்றாலம் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தென் கிழக்குப் பருவ மழை காரணமாகவும் கேரளாவில் அதிக மழை பெய்வதால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் பாதுகாப்பு காரணம் கருதி மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட கோவை குற்றாலத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் நீரின் அளவு குறைந்துள்ளதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.

Views: - 116

0

0