கொரோனா சிகிச்சை : கோவையில் மேலும் 6 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி

9 September 2020, 10:10 pm
coronavirus_updatenews360
Quick Share

கோவை: கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவை மாவட்டத்தில் மேலும் 6 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களுக்கு கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேலும், 6 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மருதமலை அருகேயுள்ள கோயமுத்தூர் டயாபட்டிக்ஸ் பவுண்டேஷன் மருத்துவமனை,

சிங்காநல்லூர் என்.ஜி மருத்துவமனை, லீயோ ஆர்த்தோ கேர் மருத்துவமனை, பிம்ஸ் மருத்துவமனை, குமரன் மெடிக்கல் சென்டர் மற்றும் கவுண்டம்பாளையம் கல்பனா மருத்துவமனை உள்ளிட்ட 6 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த 6 மருத்துவமனைகளிலும் சேர்த்து மொத்தம் 150 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைத்துறை மூலம் பரிந்துரைக்கப்படும் நோயாளிகள் மேற்கண்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0