இசைக்கருவி வாசிப்பில் முன்னேறிய சிறுவன்: ஊக்கம் கொடுத்த உதவி ஆய்வாளர்

Author: Udayaraman
1 August 2021, 6:32 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஊக்கத்தால் இசைக்கருவி வாசிப்பில் முன்னேறிய சிறுவன் உதவி ஆய்வாளரிடம் நேரில் வாழ்த்துப் பெற்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த அரசுப் பள்ளியின் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வரும் சௌந்தர்ராஜன் என்பவரது மகன் ஹரிகிருஷ்ணன். ஹரி கிருஷ்ணன் அரசம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். முன்னதாக, கடந்த 2014ஆம் ஆண்டு சிறுவன் அரிகிருஷ்ணன் சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ப்ரீ கேஜி பயிலும்போது சங்கராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றிய சிவசங்கரன், சிறுவன் ஹரி கிருஷ்ணனின் இசை ஆர்வத்தைப் பாராட்டி அவருக்கு ஊக்கமளித்து, பரிசுகளை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், தனது இசை ஆர்வத்தைப் பாராட்டி உதவி ஆய்வாளர் ஊக்கம் அளித்ததை தொடர்ந்து பள்ளி சிறுவன் கொரோனா காலகட்டத்தில் பெற்றோரின் உதவியுடன் இசைப் பயிற்சி மேற்கொண்டுள்ளார். இசைக்கருவி வாசிப்பதில் ஓரளவு கைதேர்ந்த பள்ளி மாணவன் ஹரிகிருஷ்ணன், ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தனது இசை ஆர்வத்தை பாராட்டிய உதவி ஆய்வாளரை நேரில் சந்திக்க விரும்பி தனது பெற்றோரிடம் தகவலை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அம்மாணவனின் தந்தை சௌந்தரராஜன் தற்சமயம் திருக்கோவிலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சிவச்சந்திரனிடம் தனது மகனை அழைத்து வந்து இசை கருவியை வாசித்துக் காண்பிக்க சொல்லி மகிழ்ச்சி அடைந்தார். ஆறு ஆண்டுகள் கழித்து தன்னால் வாழ்த்து பெற்ற சிறுவன் இசையில் தேறி இருப்பதை கண்டு மெய்சிலிர்த்த திருக்கோவிலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் மாணவனை கண்டு மகிழ்ச்சி அடைந்து வெகுவாக பாராட்டி, அம்மாணவனுக்கு பரிசுகளை வழங்கி மகிழ்வித்தார்.

Views: - 52

0

0