மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

25 September 2020, 5:18 pm
Quick Share

ஈரோடு: மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து ஈரோட்டில் சாலைமறியலில் ஈடுப்பட்ட 100 க்கும் மேற்பட்டோர் விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை எதிர்த்து இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார். இதே போல் அகில இந்திய விவசாய சங்கங்களின் சார்பாக நாடு தழுவிய சாலைமறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு சார்பாக ஈரோடு பேருந்து நிலையத்தில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்த வவேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்த விவசாயிகள் ஈரோடு – மேட்டூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

Views: - 3

0

0