வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் :கிருஷ்ணகிரியில் விசிக போராட்டம்!!

21 January 2021, 2:11 pm
VCK Protest - Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கலையமுதன் தலைமை தாங்கினார் மாவட்ட பொறுப்பாளர் துரைகுட்டி என்கின்ற முனுசாமி. வேப்பனப்பள்ளி ஒன்றிய செயலாளர் சிறுத்தை ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த மூட்டையை வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற போராடும் விவசாயிகளின் உயிரை துச்சமாக மதித்து செயல்படும் மத்திய அரசையும் மாநில அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மத்திய மாநில அரசுகளை கண்டித்து கையில் ஏந்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Views: - 1

0

0