அதிமுக வேட்பாளர் பலராமன் வாக்கு சேகரிப்பு

25 March 2021, 7:22 pm
Quick Share

திருவள்ளூர்: பொன்னேரி தனி சட்டமன்ற தொகுதியில் அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பலராமன் ஆரணி பேரூராட்சியில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் பாமக, பாஜக, உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர். பொன்னேரி தனி சட்டமன்றத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக போட்டியிடும் பொன்.ராஜா சோழவரம் ஒன்றியத்திற்குப்பட்ட ஆண்டார்குப்பம், ஜெகநாதபுரம், தச்சூர் உள்ளிட்ட உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதிவீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Views: - 13

0

0