கே.என்.நேருவை கைது செய்ய கோரி அதிமுக வேட்பாளர் வருவாய் அலுவலரிடத்தில் மனு

28 March 2021, 2:57 pm
Quick Share

திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேருவை கைது செய்ய கோரி அதிமுக வேட்பாளர் மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் மனு அளித்தார். மேலும் காவல் நிலைய பணப்பட்டுவாடா விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார்.

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் பத்மநாபன் போட்டியிடுகிறார். இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட தில்லைநகர் மற்றும் அரசு மருத்துவமனை காவல் நிலையங்களுக்கு 36 கவர்களில் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் நேற்று திமுகவின் மேற்கு தொகுதி வேட்பாளராக போட்டியிடும் கே.என்.நேரு
வினியோகம் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் இச்சம்பவம் தொடர்பாக நேரடி விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக இன்று திமுகவை சேர்ந்த வக்கீல் மணிவண்ணபாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலையங்களுக்கு பணம் பட்டுவாடா விவகாரம் தொடர்புடைய காவல் ஆய்வாளர் சிவக்குமார், தில்லைநகர் தலைமை காவலர் சுகந்தி, அரசு மருத்துவமனை காவல்நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலாஜி, நுண்ணறிவு பிரிவு காவலர் சங்கரன், கலியமூர்த்தி, செல்வா ஆகிய 6 பேரை சஸ்பென்ட் செய்து காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த பணம் பட்டுவாடாவுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று கே.என்.நேரு தேர்தல் ஆணையத்திற்கு தன்நிலை விளக்ககத்துடன் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பத்மநாதன், ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமாரிடம் பணம் விநியோகத்தில் ஈடுப்பட்ட கே.என் நேருவை கைது செய்ய கோரி மனு அளித்தார் , சுமார் 50 க்கும் மேற்பட்டோர் அவருடன் வந்து நேருவை கைது செய்ய கோரி முழக்கமீட்டனர்.

Views: - 18

0

0